Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2017 17:02:43 Hours

முல்லைதீவில் இடம் பெற்ற விசேட நத்தார் கரோல் நிகழ்வுகள்

முல்லைதீவின் 59ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரியா மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் முல்லைதீவு பாடசாலை மாணவர்கள் மற்றும் கத்தோலிக்க சிறார்கள் இணைந்து நடாத்திய நத்தார் தின நிகழ்வுகள் முல்லைதீவு புனித பீடர்ஸ் தேவாலயத்தில் கடந்த புதன் கிழமை (20) இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வானது இப் பிரதேசத்தில் நல்லிணக்கத்தையும் ஓர் சிறந்த நல்லுரவையும் பேனும் நோக்கில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முல்லைதீவு மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ,மாரிதிப்பத்து உயர் பொலிஸ் அதிகாரி ,முப்படை அதிகாரிகள் சிறார்கள் மற்றம் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

புனித பீடர்ஸ் தேவாலயத்தின் போதகர் அண்டன் ஜோர்ச் அவர்களினால் இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதோடு இந் நிகழ்விற்கான இசை வாத்தியத்தை இராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் வழங்கினர்.

இந் நிகழ்வின் இறுதியில் 59ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இத் திருச்சபைக்கு பியானோ வழங்கப்பட்டதுடன் 200 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொதிகளும் வழங்கப்பட்டது.

Sports Shoes | 『アディダス』に分類された記事一覧