Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2017 18:36:09 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணியினரால் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி

கொழும்பு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணியினரால் யுத்தத்தின் போது போரிட்டு உயிர் நீத்த இராணுவத்தினருக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் மத வழிபாடுகள் இப் படையினரால் ஒழுங்க செய்யப்பட்டு நவெம்பர் மாதம் 24-25ஆம் திகதிகளில் இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் பிரித் வழிபாடுகள் நவெம்பர் 24ஆம் திகதி இரவூ வேளைகளில் இடைவிடாது இடம் பெற்றதுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்வானது மஹா சங்க தேர்கள் 25பேரிற்கு நவெம்பர் 25ஆம் திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வானது இராணுவ நிதிப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜிர பாலிஹக்கார மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கேர்ணல் கெமடான்ட் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

இதன் போது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் யுத்தத்தின் போது போரிட்டு உயிர் தியாகம் செய்த 5அதிகாரிகள் மற்றும் 64 படையினர் மற்றும் மனிதாபின நடவடிக்ககைப் பணிகளின் போது ஓய்வு பெற்ற காலம் சென்ற படையினரையும் நினைவு கூர்ந்தனர்.

இந் நிகழ்வில் ரெஜிமெட் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

Mysneakers | シューズ