14th December 2017 14:16:58 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ்’ இயங்கும் 12, 121 படைப் பிரிவுகளின் ஏற்பாட்டுடன் கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அனுசரனையில் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் 1001 சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
வெல்காவையில் கங்காராம விஹாராய, கும்பக்கன மற்றும் வெஹெரயாய முன்பள்ளி மாணவர்களுக்கு இந்த நன்கொடைகள் டிசம்பர்4-5 ஆம் திகதிகளில் வழங்கப்பட்டன.
மேலும் 121 ஆம் படைத் தலைமையகத்தினால் சியம்பலாண்டு கலாசார மையத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட 6 பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அனுசரனையில் (8) ஆம் திகதி வெள்ளிக்கிழமைபாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரின் பெரேரா, 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி நலின் கொஷ்வத்த ,ரொட்டரி கழகத்தின் அனுசரனையாளரினால் பாடசாலை மாணவர்களுக்கு இந்த நன்கொடைகளை வழங்கினார்கள்.
மேலும் சியம்பலாண்டுவையில் அதே நன்கொடையாளரினால் நடமாடும் சிகிச்சை முகாம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
121 படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
bridgemedia | UOMO, SCARPE