Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2017 10:05:56 Hours

27 வது கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வில்1063 முப்படை அதிகாரிகள் பங்கேற்பு

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் மாதம்11-12 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த இறுதி நிகழ்வானது (12) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்ன பிசிசி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 1063 பட்டதாரிகளை தேர்வு செய்தனர். பாதுகாப்பு படிப்புகள், மேலாண்மை, வணிக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டெக்னிகல் சயின்ஸ், சோஷியல் சயின்ஸ், மிலிட்டரி ஸ்டடிஸ் மற்றும் ஏவியேஷன் ஸ்டடீஸ் ஆகியவற்றில் டிப்ளமோ, மாஸ்டர் மற்றும் பிசினஸ் பட்டமளிப்புகளை பெற்றுள்ளனர்.

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்ரியர் அத்மிரல் ஜகத் ரணசிங்க அவர்களினால் ஜனாதிபதிக்கு ஒரு நினைவுசின்னமும் இந்த நிகழ்வின்போது பரிசளிக்கப்பட்டது.

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்வேந்தரரான அத்மிரல் தயா சந்தகிரி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி, விமானப்படை தளபதி , பீடத்தின் நிர்வாகத்தினர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பலதுறையைச் சேர்ந்த விரிவுரையாளர்கள்,பட்டதாரிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த நிகழ்வில் இணைந்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானதுதனிப்பட்ட முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட சாத்தியமான உயர்கல்வியை வழங்குகின்றது.

Sportswear free shipping | Sneakers