12th December 2017 15:03:47 Hours
இராணுவத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தேசிய ஸ்குவாஷ் போட்டியில் பங்கு பற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தயாராகவுள்ளனர்.
இப் போட்டிகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடக்கம் -19 ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள சுகாசதாச உள்ளக விளையாட்டரங்கில் நடாத்துவதற்குஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் போட்டிகள் தேசிய ஸ்குவாஷ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் (11) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது.
இலங்கை இராணுவ ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் இந்திரஜித் வித்யானந்த 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய ஸ்குவாஷ் போட்டிகளை ஒழுங்கு செய்துள்ளார்.
2017 ம் ஆண்டு முதல் தடைவையாக இலங்கை இராணுவத்தால் நாட்டின் விளையாட்டு அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக திகழ்கின்றது.
விளையாட்டு மற்றும் இராணுவ ஸ்குவாஷ் சங்கத்தின் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்த இலங்கை தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எட்டு பட்டங்களின்கீழ் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்புடன் இடம்பெறும்.
இந்த நிகழ்வின் பரிசளிப்பு விழாவானது (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறும். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தரவுள்ளார்.
ஸ்குவாஷ் விளையாட்டானது ஆரம்பத்தில் 1906 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, 1981 ஆம் ஆண்டில் அந்த விளையாட்டானது ஸ்பான்சர் விளையாட்டுத் துறையின் கீழ் ஊக்கப்படுத்தப்பட்ட நாடாகவும் மற்றும் ஆசிய ஸ்குவாஷ் ஃபெடேசியின்கீழ் அங்கீகாரம் பெற்ற நாடகமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் இராணுவ பேச்சாளர் மற்றும் ஊடக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன,இராணுவ ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் எச்.ஜி.ஐ வித்யானந்த , இராணுவ விளையாட்டு பணிமனையின் பணிப்பாளர் அநுர சுதசிங்க, தேசிய ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற எயார் கொமடோர் ஏ. அபேசேகர, தேசிய ஸ்குவாஷ் சங்கத்தின் செயலாளர் டப்ள்யூ.எஸ்.பி ஜயவர்தன,ஸ்குவாஷ் விளையாட்டு வீரரான லான்ஸ் கோப்ரல் எச்.எம்.டப்ள்யூ.ஐ சத்துரங்க போன்றோர் கலந்து கொண்டனர்.
Authentic Nike Sneakers | New Balance 991 Footwear