11th December 2017 17:31:47 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலையைகத்தினால் வாழ்க்கை முறை தொடர்பான கருத்தரங்கு இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில கடந்த வெள்ளிக் கிழமை (08) இடம் பெற்றது.
இந் நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலையைகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கை கொழும்பு -05 செத் மையத்தின் திறமை மிக்க உயர் ஆலோசகரான திருமதி இஸர்மா காரியகரவன அவர்களின் தலைமையில்; இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இவ்வாறான வாழ்க்கை முறை தொடர்பான கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில உளநலப் பணிப்பகத்தின் தலைமையில் இடம் பெறுகின்றது.
அந்த வகையில் இக் கருத்தரங்குகள் இராணுவ வீரர்களிடையே நல்லொழுக்கத்தைப் பேணும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் இக் கருத்தரங்கின் மூலம் இராணுவ வீரர்கள் இலகுவில் தமக்கு குடும்ப ரீதியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எதிர் நோக்கக் கூடிய உள ரீதியிலான திடப்படுத்தல் மற்றும் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடல் போன்றனவற்றிற்கு தீர்வழிக்கும் முகமாகக் காணப்படுகின்றது.
இந் நிகழ்வின் இறுதியில் சாதாரண படை வீரர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இக் கருத்தரங்கில் 54 , 56 , 61 ,மற்றும் 62ஆவது படைப் பிரிவுகளின் 85இராணுவ அதிகாரிகள் மற்றும் 635 சாதாரணப் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறானதோர் கருத்தரங்கு அனுராதபுரத்தில் அமைந்துள்ள 21ஆவது படைப் பிரிவின் பராமரிப்பு கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்றது.
url clone | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret