11th December 2017 17:33:15 Hours
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது இராணுவ படைப்பிரிவினரின் பங்களிப்போடு இலங்கை கொழும்பு கண் நன்கொடை சங்கத்தின் ஒருங்கிணைப்போடு பூனேரிகிரஞ்சி அரச தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்பரி சோதனை நடமாடும் சேவையின் மூலம் பூனேரியன் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள 398 பேரிற்கு கடந்தஞாயிற்றுக்கிழமை (10) மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இக் கண்பரிசோதனை நடமாடும் சேவைக்கான நன்கொடையை 663ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை கொழும்பு கண் நன்கொடை சங்கத்தினர் வழங்கி வைத்தனர்.
அந்த வகையில் இந்நடமாடும் சேவையில் வைத்தியர் அஜந்த அபேவர்தன உள்ளடங்களான வைத்தியர் குழாமினால் பரிசோதிக்கப்பட்டு இனம் காணப்பட்ட 398 பார்வைக் குறையாடுள்ள நபர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் இறுதியில் 38 பேர் இயற்கை மரணத்தின் பின்னர் தமது கண் களைதானமான இலங்கை கண் நன்கொடை சங்கத்திற்கு வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சிப்பாதுகாப்பு படைத்தளபதியான மேஜர்ஜெனரல் அஜித்காரியகரணவன அவர்கள் 66ஆவதுபடைக் பிரவின்கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெட்டிவல அவர்களின்அழைப்பை ஏற்றுகலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் 663ஆவது படைப்பிரிவன் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல,இலங்கை கண்நன் கொடை சங்கத்தின் தலைவரான திருஈஎம்எச்பீ மொரகஸ்வெவ இதன் செயலாளர் திருடீசிதிரிஷான் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Best Nike Sneakers | Releases Nike Shoes