08th December 2017 22:54:58 Hours
கலா ஓயா இராணுவ பயிற்சி நிலையத்தில் 'ஹெல கோவிகம்'எனும் தொணிபொருளில் விவசாய முகாமைத்துவ பாடநெறி பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வு (07) ஆம் திகதி வியாழக் கிழமை 34 இராணுவ வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
பாடநெறியானது வேளாண்மை பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்தில் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நடாத்தப்பட்டது.
பயிற்சியின் போது, தாவரங்கள் மற்றும் விவசாய மேலாண்மை முறைகளில் சாகுபடி செய்வதற்கான தத்துவார்த்த நடைமுறை அம்சங்களைப் பற்றி இராணுவத்தினருக்கு தெளிவூட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் கலா ஓயா இராணுவ பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர்.ரந்துல ஹத்னாகொட மற்றும், லெப்டினன்ட் கேர்ணல் சசிக பெரேராவும் கலந்துகொண்டனர்.
Sportswear Design | Nike Shoes