Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2017 13:51:57 Hours

சாவகச்சேரி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

யாழ்ப்பாண சாவகச்சேரி பகுதியிலுள்ள குறைந்த வருமானத்தை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகள் 52 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கப்பட்டன.

இந்த நன்கொடைகள் ‘ஜீனியர் சம்மர் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரான திரு. உபுல் குலதுங்கவினால் (21) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சாவகச்சேரி ஆர்.சி.டி.எம் கல்லுரியில் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி அவர்களது மேற்பார்வையில் 523 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் டிகிரி திசாநாயக அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

பாடசாலை மாணவர்களுக்கான நன்கொடை பொதிகளை 52 ஆவது படைத் தளபதி மற்றும் அனுசரனையாளரான உபுல் குலதுங்க அவர்களினால் பாடசாலை மாணவர்களுக்கு இவ்நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் பாடசாலை நிர்வாக அதிபர்கள் >ஆசிரியர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

bridgemedia | Asics Onitsuka Tiger