Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2017 17:37:44 Hours

தென்னை பயிர் செய்கைக்கு இராணுவத்தினரால் ஒத்துழைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்களின் ஏற்பாட்டில் பூநகிரி பிரதேச வாழ் மக்களுக்கு 2000 தென்னம் கன்றுகள் மற்றும் உரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அரசபுரகுளம் பட்டாலியன் பயிற்சி வளாகத்தில் உள்ள பூமியில் 22 அடி ஆழத்தில் 12 அடி அகலத்தில் கிணறு ஒன்று அப்பிரதேச மக்களின் சுபசாதனை நிமித்தம் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க பெரிய கிணறு ஒன்று சில்வர் மில் குரூப் கம்பெனியின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான , சில்வர் குரூப் கம்பெனியின் அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Running sports | Nike Off-White