Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2017 18:05:53 Hours

இராணுவ பயிற்சி பாடநெறி மாணவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

மாதுறுஒய கனிஷ்ட இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெறும் பாதுகாப்பு படைஅதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நவம்பர் 13, 14 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டனர்.

இந்த அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் பீபிஎஸ் சில்வா,முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களை சந்தித்து பயிற்சி நெறி தொடர்பான அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் அன்றைய தினம் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற பிரதேசமான 59 ஆவது படைப் பிரிவு, 23 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 14 ஆவது சிங்கப் படையணி தலைமையகங்களுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இதன் போது பயிற்சி பாடநெறி மாணவர்களால் 14 சிங்கப் படையணி கட்டளை அதிகாரிக்கு நினைவு சின்னமும் இந்த சுற்றுலாவின் போது வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி பாடநெறி சுற்றுலாவிற்கு 15 இலங்கை இராணுவ அதிகாரிகளும் 7 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றுக்கொண்டனர்.

Asics footwear | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes