13th November 2017 12:40:28 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 படைத் தலைமையகத்தினால் 'சூழலை பராமரிப்போம்' எனும் கருத்திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு மரநடுகை நிகழ்வு (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
இராணுவ 233 படைத் தளபதியான கேர்ணல் சந்திரா ஜயவீர அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 18 ஆவது இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கருத்திட்டத்தின் கீழ் 40 தென்னங் கன்றுகள், 20 பயினஷ் கன்றுகள் மற்றும் 150 மாப்பழ செடிகள் இராணுவத்தினால் நாட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 23 படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக அவர்களது ஆலோசனைக்கமைய 233 படைத் தலைமையகத்தின் மேற்பார்வையில் 18 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.
Asics shoes | Klær Nike