Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2017 09:29:37 Hours

புதிய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மதத் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை சந்திப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித பனன்வல அவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள மதத் தலைவர்கள் மற்றம் நிர்வாக அதிகாரிகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

படைத் தளபதி இனங்களுக்கு இடையில் சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழும் முஸ்லீம் மக்களது மதத் தலைவர்களை சந்தித்து இந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார.

இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய எமது நாட்டில் சமாதான சுதந்திர வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த பேச்சுவார்த்தையின் போது இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன அத்துடன் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு இளைஞர் , யுவதிகளது விளையாட்டு துறை தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இறுதியில் இந்த மதத் தலைவர்களினால் மதுபோதை விளிப்புணர்வு கருத்திட்டம் இப்பிரதேசத்தில் நடத்துமாறு வேண்டுகோளிடப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லீம் மத தலைவர்களான அனவர் முஸ்லீம் பள்ளியின் அத்ராம் பாவா, காத்தான்குடி முஸ்லீம் பள்ளியின் எம்.ஐ.எம். ரஹிம், நுகா மன்றத்தின் தலைவர் ரசிட் ஹாஜியார் , நிர்வாகிகள் மற்றும் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Running sports | Men’s shoes