28th October 2017 21:03:30 Hours
இராணுவத் தளபதியான லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கிழக்கு இராணுவப் படைத் தலைமையகத்திற்கு சனிக் கிழமை (28) பயணித்தார்.
இதன் போது இப் படைத் தலையைகத்தின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் நலன்பரி விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இவ்வாறு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் வரவேற்றதுடன் 7ஆவது பொறியியலாளர்ப் படையினரால் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.
அந்த வகையில் 1000 படையினரைக் கொண்ட இத் தலைமய படையினருக்கு இராணுவத் தளபதியவர்கள் பயிற்சிகள் மற்றும் ஒழுக்கம் தொடர்பான விடயங்களை கடைப் பிடித்தலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.
இராணுவ தளபதி ஆணைச்சீட்டு அதிகாரி 1அவரின் அழைப்பின் பேரில் இந்த இந்த படையினர்களுக்கான விடுதியை ரிபன் வெட்டி திறந்து வைத்து அந்த கட்டிட தொகுதிகளையும் பார்வையிட்டார்.அத்துடன் இப் படையனியில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதியில் இப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபரசாரத்திலும் தளபதியவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இப் படைத் தலைமையகத்தின் தளபதியவர்களால் இங்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்ட இராணுவத் தளபதியவர்கள் அன்ற தினமே (28) விடைபெற்றார்.
affiliate link trace | Nike Shoes, Clothing & Accessories