28th October 2017 19:00:09 Hours
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக் கிணங்க இராணுவத்தின் இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 50ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிகளில் கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலரியில் இடம் பெறவுள்ளது.
அந்த வகையில் தமது திறமைகளை கலை வேலைப்பாடுகள் மூலம் வெளிக்காட்டும் இக் கண்காட்ச்சியானது இவ்வாறு அங்கவீனமுற்றவர்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.
அந்த வகையில் இக் கண்காட்சியானது வத்தளை ரணவிரு வள மையத்தின் ஒருங்கிணைப்போடு இராணுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு போன்ரோரின் பங்களிப்போடு இடம் பெறவுள்ளது.
இக் கண்காட்சியானது பொதுமக்களுக்காக எதிர்வரும் புதன் கிழமை (1) பி.ப 7.00 மணி முதல் வியாழக் கிழமை(2) பி.ப 9.00 மணிமுதல் மு.ப 10.00 வரை காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன் இக் கண்காட்ச்சியில் களிமண் கரும்பு, மூங்கில், பனை, மலர், பட்டை, காகிதம், இலை, விதை,மற்றும் நெசவுத் தாவர பொருட்கள், சிற்பங்கள் மற்றும் பல்வேறு கலைப்படைப்புகள் , காட்சிப்படுத்தப்படவுள்ளது.
latest Nike Sneakers | Nike