28th October 2017 21:03:39 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்ளின் ஆலோசனைக் கிணங்க மேற்கொள்ளப்படும் ஹரித கம்மான எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் மரநடுகைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு ரணவிரு ஹரித அரண எனும் நிகழ்வானது இன்று (27) காலை வேளை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கத்தளாய் , கந்தகாடு பன்னை வளாகத்தில் கிட்டத் தட்ட 1500 மரங்கள் நடப்பட்டன.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதியவர்கள் ,கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர இப் படைத் தலைமையக முன்னோக்கு பாதுகாப்பு வலய அதிகாரியான மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக்க ,இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் வஜிர பஹிலக்கர , இப் படைத் தலைமயக உயர் அதிகாரிகள் , மகாவெலி அதிகார சபை ,சிலோன் மின்சார சபை போன்றவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இராணுவத் தளபதியவர்கள் இம் மரநடுகைத் திட்டத்திற்கான முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதுடன் அத்துடன் கந்தக்காடு பிரதேசம் உள்ளடங்களாக நாடு முழுவதும் இத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இம் மரநடுகைப் பன்னைகளை நடாத்துகின்ற இராணுவ வீரர்களின் சேவைகள் பற்றிய கண்காணிப்பையும் இராணுவத் தளபதியவர்கள் மேற்கொண்டார்.
அத்துடன் இப் பன்னைகளில் மேற்கொள்ளப்படும் மர நடுகை தொடர்பான விளக்கத்தை இராணுவ விவசாய பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்தின அவர்கள் வழங்கினார்.
அத்துடன் கந்தக்காடு மரநடுகைப் பன்னைகளில் கிட்டத் தட்ட 300 இராணுவத்தினர் மர நடுகைகளை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஒக்டோபர் மாதம் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் வனரோப மூன்று வருட நிகழ்சித் திட்டம் தொடர்பாக விளக்கிக் கூறப்பட்டதோடு அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக புனருதைய திட்டமும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இக் கிழக்கு பாதுகாப்பு படையினரால் சேருவாவில சோமாவதிய வீதியோரங்களில் கிட்டத் தட்ட 9கிமீ உள்ளடங்களான பிரதேசத்தில் மரநடுகையை மேற்கொண்டனர்.
இந் நிகழ்வில் கல்கந்தை மஹா வித்தியாலய மற்றும் சிங்கபுர வித்தியாலய மாணர்வகளும் பங்கேற்றனர். Adidas footwear | FASHION NEWS