Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2017 16:00:30 Hours

அவயங்களை இழந்த படை வீரர் மூவரது திருமண நிகழ்வு

நாட்டின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதித்தம் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவயங்களை இழந்து விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் மூவரது திருமண நிகழ்வு ‘பியநெவே அபி’ அமைப்பின் போயகன ‘ த சலுட்’ ஹோட்டலில் செவ்வாய்க கிழமை (24) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த திருமண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இவர்களது திருமணத்தில் பதிவேடு புத்தகத்தில் இந்த படை வீரர்கள் சார்பாக கையொப்பமிட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் விஜயபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளான பிரிகேடியர் சந்தன குணவர்தன, பிரிகேடியர் ஸ்ரீநாத் ஆரியசிங்க மற்றும் திருமண வீட்டு சார்பாக இருபக்க உறவினர்களும் கலந்து கொண்டனர்.

‘சியநெவே அபி’ அமைப்பினால் ஆறு தடவை தொடர்ச்சியாக ஓழுங்கு செய்த இந்த திருமண நிகழ்வில் பகல் விருந்து மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் ஒத்தழைப்புடன் இடம்பெற்றது.

அபிமங்சள 1, 2 நிலையங்களில் மற்றும் படையணி தலைமையகங்களில் கடமை வகிக்கும் படை வீரர்களான 4, 6, 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன் பி.ஜி.எஸ்.கே நந்தசிறி, கோப்ரல் ஜி.டீ.டி.பீ.எஸ்.கே சாம்கர, கோப்ரல் எம்.பீ. பிரேமசிறி போன்ற படை வீரர்களுக்கே திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.

எல்டிடிஈ பயங்கரவாதத்துடன் நகர்கோவிலில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது சாஜன் நந்தசிரி அவயங்களை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டார். இவர் கொக்கரல்ல பிரதேசத்தில் வசிக்கும் நிஷாந்தி மதுஷானியை மணம் முடித்தார்.

புதுமத்தாளன் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது தாக்குதலுக்கு உள்ளாகி அவயங்களை இழந்த கோப்ரல் ஜி.டீ.டி.பீ.எஸ்.கே சாம்கர மதுகமவைச் சேர்ந்த திஸ்னா பிரபோதனியை மணம் முடித்தார்.

புதுக்குடியிறுப்பு இறுதி பயங்கரவாத நடவடிக்கைகளின் போது காயமடைந்த போர் வீரனான கோப்ரல் எம்.பி பிரேமசிறி மொரகேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்திமா ஹேமலதா ரணதுங்க அவர்களை மணம் முடித்தார்.

இந்த திருமண நிகழ்விற்கு இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா , இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரகேடியர் சாந்த திருநாவுக்கரசு போன்ற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

best Running shoes brand | Nike Shoes