Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2017 16:19:33 Hours

வாசிங்டனில் கலந்து வெற்றியீட்டிய இலங்கை இராணுவ யங்கி

இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டுகள் தமது சிறந்த மோப்ப சக்தியின் மூலம் நுகர்ந்து கண்டெடுக்கக் கூடிய திறமை மிக்க நாயாகக் காணப்படும் யங்கி அமெரிக்காவின் வாசிங்டனில் மார்சல் மரபுரிமை நிறுவனத்தின் (MLI) 20ஆவது நினைவாண்டை முன்னிட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (24)இடம் பெற்ற பாதைச் சுத்திகரிக்கும் போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

இவ்வாறு இவ் யங்கி எனும் பெண் நாயானது இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் நாய்களினைப் பயிற்றுவிக்கும் மையத்திலிருந்து ( MDD) இரண்டாவது முறையாக பங்கேற்கிறது.

அந்த வகையில் கிரீன்விச் பாடசாலை மாணவர்களின் அனுசரனையோடு இடம் பெற்ற இந் நிகழ்வில் யங்கி எனும் நாயானது இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் வெடிகுண்டுகள் அகற்றம் படையணியில் ஆறு வருடங்களாக காணப்படுவதோடு மனிதாபிமான பணிகளின் போது வெடிகுண்டுகளை அகற்றி பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

அந்த வகையில் இவ் யங்கியானது 62,680 பரப்பளவான நிலப்பரப்பை சுத்திகரித்து வெடிகுண்டுகளை அகற்றியுள்ளது.

மேலும் வாசிங்டனில் மார்சல் மரபுரிமை நிறுவனத்தில் இடம் பெற்ற போட்டியில் K9 அம்பசடைக் கண்டுபிடித்து மீட்டுள்ளது.

அத்துடன் இந் நிறுவனத்தினால் கிட்டத் தட்ட 30 நாய்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்ப் படையணிக்கு மனிதாபிமானப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திறமையாக செயலாற்றக் கூடிய யங்கி எனும் பெண் நாயின் பயிற்றுவிப்பாளராக இலங்கை இராணுவ பொறியியலாளர் வெடிகுண்டு அகற்றும் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டி கே டீ ராஜபக்ஷ எனும் இராணுவப் படை வீரர் காணப்படுகிறார்.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நாய்க் குழுவிற்கான விருதை மார்சல் மரபுரிமை நிறுவனத்தின் (ஆடுஐ) பணிப்பாளரான திரு பெரி எப் போல்டிமோ அவர்கள் வழங்கினார்.

அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்ப் படையணியின் தளபதியான பிரிகேடியர் அமித் செனெவிரத்தின அவர்கள் இ இப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி கே டீ ராஜபக்ஷ போன்றௌர் கலந்து கொண்டதுடன் யங்கி எனும் பெண் நாயும் கலந்து கொண்டது.

அத்துடன் இந் நிகழ்வில் அமெரிக்க ஸ்டேஸ் செயலாளரான வைத்தியர் மெட்லின் ஆல்பிரயிட் அமெரிக்க பிரதிநிதிகளான மைக் எனசி (ஓய்வு) மற்றும் மார்சல் மரபுரிமை நிறுவனத்தின் தலைவரான கோடோன் ஆர் சுல்லிவன் போன்றௌறும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இலங்கை அரசானது இலங்கையில் 2020 இல் இந் நாட்டின் வெடிகுண்டுகளற்ற நாடாக்க முயல்கின்றது.

Mysneakers | adidas Yeezy Boost 350