Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2017 14:37:35 Hours

யாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றினைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டமானது யாழ் மையிலடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக் கிழமை (21) இடம் பெற்றது.

அந்த வகையில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற் கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்கள் 51ஆவது மற்றும் 515ஆவது படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக் கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கான ஒழுங்கமைப்பை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் ஆலோசனைக் கினங்க 51ஆவது மற்றும் 515ஆவது படைப் பிரிவினர் மேற்கொண்டனர்.

மேலும் இத் திட்டத்தில் கிட்டத்தட்ட 150 மரக் கன்றுகள் யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் திரு . எஸ் .முரலிதரன் அவர்களின் தலைமையில் பயிரிடப் பட்தோடுஇந் நிகழ்வில் கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ,யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா , லயன்ஸ் கழகத்தினரின் 306B2 தலைவியான திருமதி சியாமா டி சில்வா ,தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளடங்களான பலரும் தமது பங்களிப்பை வழக்கியுள்ளனர்.

அந்த வகையில் இந் நிகழ்வில் இராணுவப் படையினர் மற்றும் பொது மக்களிற்கு தென்னை மரக்கன்றுகள் போன்றன பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இத் தென்னை மரக்கன்றுகள் மூன்று வருடக் காலப் பகுதியில் நல்ல பயனைப் பெற தக்கதாகவும் காணப்படுகின்றது.

அந்த வகையில் இத் திட்டத்தின் மூலம் கிட்டத் தட்ட 10 000 மரக் கன்றுகளை பயிரிடவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Running sport media | Women's Sneakers