Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2017 10:33:28 Hours

இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையினரின் நினைவாண்டு நிகழ்வு

இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையினர் தமது படையணியின் 74ஆவது ஆரம்ப நினைவாண்டை கடந்த வியாழக் கிழமை (19) கொண்டாடியதுடன் பனாகொடையிலுள்ள இப் பயைணியில் யுத்தத்தின் போது போரிட்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவுத் துாபிக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த வகையில் இப் படையணியானது லெப்டினன்ட் கேர்ணல் டீ வீ புரோஹியர் அவர்களால் 1943ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் யுத்தத்தின் போது போரிட்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களளுக்கான இரு நிமிட அஞ்சலியும் , இவர்களது நினைவுத் துாபிக்கு பௌத்த , கிறிஸ்தவ , இந்து மதப் போதகர்கள் மற்றும் இவ் வீரர்களின் 109 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களின் நினைவுத் துாபிக்கு மலர் கோவைகளைச் சூடி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கமைவாக பிரித் வழிபாடுகள் பௌத்த தேரர்களால் இடம் பெற்றதுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இத் தலைமையகத்திற்கு வருகை தந்த இப் படைத் தளபதியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றதுடன் இப் படையினருடனான மதிய உணவு விருந்தோம்பலும் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதிக் கட்ட அம்சங்கள் பியூகள் இசையோடு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க , ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் உயிர் நீத்த இராணுவப் படையினரின் குடும்ப அங்கத்தவர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

affiliate tracking url | Nike