Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2017 12:22:08 Hours

சியநெவே அபியினால் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மூவரிற்கு திருமண ஏற்பாடுகள்

சியநெவே அபி எனும் கம்பஹா சியனே கோரளய எனும் கழகத்தைச் சேர்ந்த குழுவினர் யுத்தத்தின் போது எல் ரி ரீ ஈ யினருடன் போரிட்டு அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான திருமண நிகழ்வுகளை தமது சொந்த செலவில் இவ் வைபவத்திற்கு தேவையான அனைத்து செலவீனங்களையும் பொறுப்பேற்று நடத்தவுள்ளனர்.

அந்த வகையில் எதிர் வரும் செவ்வாய்க் கிழமை(24) குருணாகலை போயகன பிரதேசத்திலுள்ள விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்தில் இடம் பெற இருப்பதோடு பிரதம அதிதியாக இராணுவத் தளபதியவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் காரியகரவண மற்றும் இத் தலைமையக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் டபிள்யூ எஸ் ஆரியசிங்க போன்றௌர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இடம் பெறவிருக்கும் இத் திருமண நிகழ்வூகள் இராணுவத் தளபதியவர்களின் ஒருங்கிணைப்போடு பல இராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெறவிருக்கும் இந் நிகழ்வில் 8ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் பீ ஜி எஸ் கே நந்தசிறி , 6ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்பிரல் ஜி டீ டி பீ எஸ கே சமிக்கர மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த எம் பி பிரேமசிறி போன்ற அங்கவீனமுற்ற படையினர் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

Sports brands | Air Jordan