Header

Sri Lanka Army

Defender of the Nation

20th October 2017 16:22:02 Hours

துனுக்காய்ப் படையினரால் திபாவெளிப் பண்டிகை சிறப்புப் பெற்றது

கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படையணி 651,652 மற்றும் 653 போன்ற படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினர் தீபாவெளிப் பண்டிகையை சிறப்பிக்கும் நோக்கில் கடந்த புதன் கிழமை (18) ஆளங்குளம் துனுக்காய்ப் பிரதேசத்தில் கொண்டாடினர்.

இதன் போது இப் படையினர் கோவில் வளாகங்களை சுத்திகரித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மரக்கறி உணவு வகைகளையும் குளிர் பாணங்களையும் வழங்கி வைத்தனர்.

அந்த வகையில் முல்லைத் தீவுப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினர் முத்தியன்கட்டு பிள்ளையார் கோவிலின் பூஜை வழிபாடுகளில் கடந்த வெள்ளிக் கிழமை (13) ஈடுபட்டனர்.

மேலும் இப் படையினர் முல்லைத் தீவைச் சேர்ந்த மத குருக்களுடன் கடந்த 13-18ஆம் திகதி வரைக் கொண்டாடினர்.

மேலும் இப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட படையினர் ஒட்டுசுட்டானிலுள்ள சிவன் கோவிலின் சுத்திகரிக்கும் பணிகளில் கடந்த செவ்வாய்க் கிழமை (17) ஈடுபட்டனர்.

மேலும் கடந்த புதன் கிழமை (18) இடம் பெற்ற பூஜை நிகழ்வுகளில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலின் வழிபாட்டாளர்களுக்கு குளிர்பாணம் போன்றவற்றை வழங்கி வைத்தனர்.

மேலும் இச் சமய வழிபாடுகள் 64ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களால் இடம் பெற்றதாகும்.

இந் நிகழ்வில் 64ஆவது படைப் பிரிவின் இராணுவ உயர் அதிகாரிகள் ,படையினர் மற்றும் பொது மக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

Best jordan Sneakers | Nike