Header

Sri Lanka Army

Defender of the Nation

20th October 2017 16:08:11 Hours

மதநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 57ஆவது இராணுவப் படையினர்

கிளிநொச்சியிலுள்ள 57ஆவது படைப் பிரிவின் படையினர் கிளிநொச்சி கரிதாஸ் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து கிளிநொச்சி புனித தெரேசா ஆலய வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை கடந்த 12 முதல் 13ஆம் திகதி வரை மேற்கொண்டனர்.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண அவர்களின் ஆலோசனைக் கிணங்க 57ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 7ஆவது காலாட் படையணி 9ஆவது விஜயபாகு காலாட் படையணி , 16ஆவது (தொண்டர்) காலாட் படையணி மற்றும் 17ஆவது (தொண்டர்) கஜபா படையணிகளைச் சேர்ந்தவர்கள் இச் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டதுடன் பௌத்த மத குருமார்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உண்டாக்கும் நோக்கில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அனைத்து மதங்களினதும் மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

latest Running | Gifts for Runners