Header

Sri Lanka Army

Defender of the Nation

20th October 2017 15:59:12 Hours

முல்லைதீவுப் படையினர் குத்துச் சண்டை வீரர்களுக்கு கௌரவிப்பு

அகில இலங்கை ரீதியில் டி பீ ஜயா ஞாபகார்த்த நினைவு தின குத்துச் சண்டைப் போட்டியில் முல்லையாவெலி வித்தியானந்த மகா வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டினர்.

அந்த வகையில் இவர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த திங்கட் கிழமை (16) முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமைய அரங்கில் 59ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லை தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு கலந்து கொண்டதுடன் 59ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் என் டி வன்னியாராச்சி . வலயக் கல்வி பணிப்பாளரான செல்வி யூ புவனராஜா . முல்லையாவெலி வித்தியானந்த மகா வித்தியாலய அதிபரான திரு பி கே சிவலிங்கம் . மாஸ் (MAS) நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளரான ரெநோல்ட் பெணான்டோ மற்றும் குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளரான திரு எஸ் வல்லுவன் போன்ரோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்களான யோகநாதன் ஜெனாநன் ,யோகேஷ்வரன் கிரிதரன் ,முரலிதரன் தனுஜன் போன்றௌருக்கு நான்கு துவிச் சக்கர வண்டிகளை பிரதம அதிதியவர்கள் வழங்கினார்.

இந் நிகழ்வின் இறுதியில் இதில் கலந்து கொண்ட பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட இராணுவ அதிகாரிகள் புகைப் படப்பிடிப்பிற்கும் சமூக மளித்தனர்.

url clone | Sneakers Nike Shoes