Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2017 08:02:25 Hours

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான புதிய நீச்சல் தடாகம் கையளிப்பு

யுத்தத்தின் போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான புதிய நீச்சல் தடாகம் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் கட்டமைக்கப்பட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (17) கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் யக்கலயில் அமைந்துள்ள ரணவிரு அப்பரலில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டனதுடன் இந் நீச்சல் தடாகத்தில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சிகிச்சையளிக்கும் முகமாக மருத்துவக் குவளைகள் போன்றனவும் வடிவமைக்கப்பட்டுள்ளதென மேலும்அவர் தெரிவித்தார்.

மேலும் இப் பிரதேசத்திற்கு இரண்டாவது முறையாக இராணுவத் தளபதியவர்கள் வருகை தந்துள்ளதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி உள்ளடங்களான உயர் அதிகாரிகளை இராணுவ பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றதுடன் பிததி பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பொணான்டோ அவர்களுகம் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ உயர் அதிகாரிகளுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

பின்னர் இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களால் நீச்சல் தடாகம் திறந்து வைக்கப்பட்டதுடன் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கமைவாக பபொலகஸ்தெனிய விகாரையின் விகாராதிபதியான அம்பிட்டியே தம்மிக்க தேரர் அவர்களால் பௌத்த மத ஆசிகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலவாறான நீச்சல் போட்டிகளும் இடம் பெற்று டேவிட் மெரிக் ஞாபகார்த்த விருதும் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வை அலங்கரிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படை மற்றும் தரைப் படையைச் சேர்ந்த படையினரால் பலே நடனம் போன்றனவும் இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வுகள் ரணவிரு அப்பரலின் தளபதியான பிரிகேடியர் சேனக திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டதுடன் இராணுவத் தளபதியவர்கள் ரணவிரு அப்பரலிற்கான ஊடக வலயமைப்பையும் திறந்து வைத்துள்ளார்.

Best Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp