Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2017 16:49:08 Hours

பழைய ஆனந்தாக் கல்லுாரி மாணவர்களால் நன்கொடை

கொழும்பு ஆனந்தாக் கல்லுாரியைச் சேர்ந்த 1975 – 1980 வரையான ஆண்டுப் பகுதியில் இக் கல்லுாரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களால் திருகோணமலை கல்லார் சோமபுர மகா வித்தியாலத்தைச் சேர்ந்த தேவையுள்ள மாணவர்களுக்கென பலவாறான நன்கொடைகளை வழக்கினர்.

அந்த வகையில் திருகோணமலை கல்லார் சோமபுர மகா வித்தியாலய பாடசாலை அதிபர் அவர்களினால் 222ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேணல் தீபால் புஸ்செல்ல அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கினங்க இவ் அதிகாரியவர்கள் இராணுவத் தளபதியிடம் மேற்படி விடயம் தொடர்பாக எடுத்துக் கூறியதையடுத்து இராணுவத் தளபதியவர்களால் ஆனந்தாக் கல்லுhரியைச் சேர்நத பழைய மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற்கினங்க மேற்படி பல வசதிகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இப் பாடசாலை மாணவர்களுக்கான கணணிக் கூடம் ,நுாலகம் ,பாடசாலை உபகரணங்கள் ,இசைக் கருவிகள் போன்ற பல பாடசாலை உபகரணப் பொருட்கள் இம் மாணவர்களால் வழங்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலையைகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது விஜயபாகு காலாட் படையினரின் பங்களிப்போடு முன்னய பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியவர்கள் சுமார் 7இலட்சம் ருபாவினை நன்கொடையாக இக் கல்லுாரிக்கு வழங்கினர்.

இதன் போது 22ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் இக் கல்லுhரியின் பழைய மாணவர்களின் பங்களிப்போடு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியன்று இக் கட்டிட திறப்பு விழா நிகழ்த்தப்பட்டது.

இதன் போது பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக பௌத்த மத தேரர்களின் பங்களிப்போடு இந் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 221 மற்றும் 222 படைப் பிரவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை சிறார்கள் ,ஆசிரியர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people