Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2017 10:56:22 Hours

பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இராணுவ நினைவு தின நிகழ்வுகள்

68 ஆவது இராணுவ நினைவு தினத்தையிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம்,வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் முதல் கட்டமாக ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ரசிக கருணாதிலக அவர்களின் தலைமையில் படைத் தலைமையகத்தினுள் தேசிய மற்றும் இராணுவ கொடிகளை ஏற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து தலைமையகத்தில் சேவையாற்றும் அனைத்து இராணுவத்தினருக்கும் மதிய போசன விருந்து வழங்கப்பட்டது.

மேலும் அன்றைய தினமே வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் எச்.பி.என்.கே ஜயபத்திரன அவர்களின் தலைமையில் படைத் தலைமையகத்தினுள் பௌத்த,இந்து,கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் சமய வழிபாட்டு ஆசீர்வாத பூஜைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து தலைமையகத்தில் சேவையாற்றும் அனைத்து இராணுவத்தினர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. மேலும் (8) ஆம் திகதி வவுனியா அனாதை சிறுவர் இல்லத்திலிருக்கும் சிறுவர்களுக்கு இந்த பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனுசரனையில் மதிய போசனம் வழங்கப்பட்டது.

அதே தினம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் பொது நிர்வாக பிரதி பிரதானியின் தலைமையில் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பௌத்த,இந்து,கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் சமய வழிபாட்டு ஆசீர்வாத பூஜைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தினுள் இராணுவத்தினர் 100 பேரது பங்களிப்புடன் (9) ஆம் திகதி திங்கட் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

jordan release date | Air Jordan