11th October 2017 15:08:26 Hours
யாழ்ப்பாண மாணவர்களிடையே கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்ம் 52 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நலன்புரி நன்கொடை நிகழ்ச்சி திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புத்துார் மதி பன்னசிகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு 100,000 பெறுமதிமிக்க பாடசாலை பைகள் மற்றும் காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டு அப் பாடசாலையில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்கள் மூவர் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர். மேலும் அப் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண வன்னியாரச்சியின் தலைமையில் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.
Nike shoes | Shop: Nike