Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2017 08:31:02 Hours

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ன்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மாலை பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் இந்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் முகமாக நிகழ்வு இடம்பெற்றது.

இன்று பனாகொடையில் இடம் பெற்ற 68 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு முடிவின் பின்பு மாலை பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். அவரை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றார்.

அதன் பின்பு தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதத்துடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு பின்பு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அங்சலி செலுத்தப்பட்டது.

இராணுவத்தில் உள்ள போர் வீரர்கள் காட்டிய துணிவுமற்றும் தைரியத்தை நினைவு படுத்தும் முகமாக இராணு இசைக் குழுவினரால் ஹெவிசி புராபத்து,மகுல் பெர,கெட்டா பெரா போன்ற பாரம்பாரிய மேள தாள ஓசையுடன் கௌரவத்தை வழங்கினர்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி,பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நினைவு துாபிகளுக்கு மலரஞ்சலி செலுத்தி தமது மனப்பூர்வமான கௌரவத்தை தெரிவித்துள்ளனர்.

இறுதியாக இராணுவ பேண்ட் வாத்திய குழுவினரின் ஊதுகுழல் வீரர்களின் லாஸ்ட போஸட் இசை மரியாதையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

jordan Sneakers | Trending