Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2017 22:20:15 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு சைவ மத வழிபாடுகள்

இலங்கை இராணுவத்தின் 68ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மத வழிபாடுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

அந்த வகையில் இன்றய தினம் (04) மாலை இடம் பெற்ற இந்து மத பூஜையானது கொழும்பு 13இல் அமைந்துள்ள கோவிலான ஸ்ரீ பொண்ணம்பலம் வானேஸ்வரர் கோவிலின் பிரதான குருக்கள் சுரேஷ் சர்மா அவர்களில் தலைமையில் அபிசேகப் பூஜைகள் இடம் பெற்றன.

இலங்கை இராணுவ இந்து சங்கமத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த அபிசேகப் பூஜையில்,கொண்டு வரப்பட்ட இராணுவ கொடிக்கு விசேட ஆசிர்வாத பூஜை நடைப்பெற்றது.

மேலும் இப் பூஜைக்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இந்து சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் சாந்த திருநாவுகரசு அவர்களால் வரவேற்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவத் தளபதியை கோவிலின் பிரதான குருக்களினால் வரவேற்கப்பட்டதோடு இராணுவத்தை ஆசிர்வதிப்பதற்காக இராணுவத்தின் கொடியையும் பெற்றுக்கொண்டார்.

கோவிலின் பிரதான குருக்கள் சுரேஷ் சர்மா அவர்களின் தலைமையில் அபிசேகப் பூஜைகள் போன்றனவும் இடம் பெற்றன.

இலங்கை இராணுவ இந்து சங்கமத்தின் ஒழுங்கமைப்பில்,கோவிலின் பிரதான குருக்கள் சுரேஷ் சர்மா அவர்களின் தலைமையில் இப் பூஜைகள் இடம்பெற்றதோடு, பிரதம அதிதியாக இராணுவப் பதவிநிலைப் பிரதானியான இராணுவ இந்து சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசுமற்றும் பல இராணுவ உயர் அதிகாரிகள், படையினர் கலந்து கொண்டனர்.

Mysneakers | Mens Flynit Trainers