Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2017 17:12:48 Hours

ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத நிகழ்வுகள்

இராணுவத்தின் 68 ஆவது வருட நிகழ்வு தினத்தையிட்டு அனுஷ்ட்டிக்கும் முகமாக அநுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத பௌத்த நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இம் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு முதலாவது பௌத்த சமய நிகழ்வுகள் கண்டி தளதா மாளிகையில் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதியும் இரண்டாவது இராணுவ கொடிகளுக்கான ஆசர்வாத பௌத்த நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதியும், கிறிஸ்தவ ஆசீர்வாத நிகழ்வுகள் 03ஆம் திகதி கொழும்பு பொரளை கிறிஸ்தவ தேவாலயத்திலும்இந்து மற்றும் முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வுகள் 04 ஆம் திகதி கொழும்பு பொன்னம்பலம் வானேஷ்வரர் கோயில் மற்றும் யும்பா பள்ளியிலும் இடம்பெறும்.

இந்த இராணுவ ஆசிர்வாத சமய நிகழ்வுகளுக்கு இராணுவத்தின் 100 க்கு அதிகமான இராணுவத்தினர் இராணுவத்திலுள்ள அனைத்து கொடிகளை ஏந்திய வண்ணம் பௌத்த கலாச்சார மேள தாளங்களுடன் வருகை தந்து இராணுவ தளபதியின் தலைமையில் ஜெய ஸ்ரீ மஹா போதியில ஆசிர்வாத நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இராணுவ தளபதி மல்லிகை, தாமரை மலர்களை புனித மரத்தின் அடிவாரத்தில் வைத்து இராணுவத்திற்கு ஆசிர்வாத ஏற்படும் வகையில் நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களது ஆத்மா சாந்தியடையும் நோக்கத்துடன் தனது பிறார்த்தனைகளை மேற்கொண்டார்.

இந்த ஆசீர்வாத நிகழ்வுகளின் போது இலங்கை இராணுவத்தின் இராணுவ தலைமையகம், தொண்டர் படைத் தலைமையகம் , பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், பயிற்சி நிலையங்கள் மற்றும் படையணிகளின் கொடிகள் இந்த பௌத்த ஆசீர்வாத நிகழ்வுகளுக்கு முன் வைத்து ஜெய ஸ்ரீ மஹா போதியின் ஆசீர்வாதத்தை இராணுவம் பெற்றது.

புனித ஸ்தல அபிவிருத்தியை மேலோங்கச் செல்வதற்கு மில்லியன் ரூபாய் நிதி இராணுவ தளபதியினால் பல்லேகம சிறினிவாசபிஹிந்தான பௌத்த தேரருக்கு இந்த நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.

இராணுவ ஆசிர்வாத சமய நிகழ்வுகளுக்கு வென் பல்லேகம சிரினிசுவாசபீதா மகா சங்கம். வெண் நுகத்தெனே பன்னானந்த நயாக தேரர், ஸ்ரீ ஜயந்தி விஹாராயா மற்றும் வென் ரல்பானவே ரதான ஜோதி நாயக்க தேரர், மகா சங்கம். வெண் நுகத்தெனே பன்னானந்த நயாக தேரர், ஸ்ரீ ஜயந்தி விஹாராயா மற்றும் வென் ரல்பானவே ரதான ஜோதி நாயக்க தேரர்கள் கலந்கொண்டனர்.

இராணுவ ஆசிர்வாத சமய நிகழ்வுகளுக்கு பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, நிறைவேற்று ஜெனரல் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த பௌத்த சமய நிறைவின் பின்பு இராணுவ தளபதி அநுராபுரத்தில் அமைந்துள்ள அபிமன்சல – 1 நிலையத்திற்கு சென்று அங்கு அங்கவீன முற்ற படை வீரர்களை சந்தித்து அவர்களது நலன்புரிகள் தொடர்பாக விசாரித்து இவர்களுக்கு பரிசு பொதிகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து இறுதியில் ருவன்வெலிமஹாசேயவிற்கு சென்று இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றையும் இந்த வளாகத்தினுள் நாட்டினார்.

நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம் தற்பொழுது 24 படையணிகளையும் தொண்டர் படைகளையும் கொண்டு 2009 ஆம் ஆண்டு கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து சிறந்த இராணுவமாக விளங்குகின்றது.

url clone | Nike