Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2017 17:14:06 Hours

கிளிநொச்சிப் படையினர் வனரோப எனும் செயற்த்திட்டத்தில் மரக் கன்றுகள் வினியோகம்

மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வனரோப எனும் மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் 135,000 அளவிலான மரக் கன்றுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது மக்களின் பங்களிப்போடு நடப்பட்டது.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலில் 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் கண்காணிப்பின் கீழ் இப் படைத் தலைமைய கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட் கிழமை (25) இடம் பெற்றது.

இதன் போது மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களினால் இந் நிகழ்வில் கலந்து கொண்ட் கிளிநொச்சி மாவட்ட வன அதிகாரியான திரு நல்லதம்பி ஜெயந்திரன் அவர்களுக்கும் இப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு கிட்டத் தட்ட 200 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் 57ஆவது படைத் தலைமையகமானது தமது சுய செயற்பாட்டின் மூலம் இம் மரக் கன்றுகளை உருவாக்கியதுடன் இப் படையினர் 100,000 மரக் கன்றுகளை நட ஆலோசித்ததுடன் 35,000 கன்றுகளில் மீதிய கன்றுகளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வழங்கவூம் உள்ளனர்.

மேலும் இம் மரக் கன்றுகள் மா ,பலா ,தோடை ,கும்புக்,கஜீ ,தென்னை போன்ற மரக் கன்றுகள் இவ் வருட இறுதிக்குள் நட ஆலோசிக்கப்பட்டுள்மை குறிப்பிடத் தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் மர நடுகையின் முக்கியத்துவம் பற்றிய விளக்க உரையை கலந்து கொண்டவர்களுக்கு நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி ,கிளிநொச்சி மாவட்ட வன அதிகாரியான திரு நல்லதம்பி ஜெயந்திரன , 571 ,572,மற்றும் 574 படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 300 படை வீரர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

best Running shoes | FASHION NEWS