Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2017 09:37:06 Hours

இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கான கருத்தரங்கு

இராணுவத் தலைமையகத்தின் சட்ட பணியகத்தினால் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இராணுவ வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக் கிழமை (28) இடம் பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களது எண்ணக் கருவிற்கமைய இராணுவ நீதி பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எட்வட் ஜயசிங்க அவர்களினால் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகளின் விழிப்புணர்வு மூலம் பொதுமக்கள், சிவில் சமூகம், பொது அதிகாரிகள், மதப் பிரமுகர்கள், பள்ளி குழந்தைகள், இளைஞர் மற்றும் அவர்களின் பங்குதாரர்கள் ஆகியோரை அடையும் நோக்கில் அரசியலமைப்பு சட்டமன்றத்தின் பொது நலத்திட்ட நிகழ்ச்சி பயனுள்ள மற்றும் விரிவான பொது விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய பொது பிரதிநிதிகளின் குழுவின் செயலாளர் திரு. வின்ஸ்டன் பதிராஜா, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொது பிரதிநிதிகளின் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்கவின் தலைமையின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஒரு புதிய அரசியலமைப்பிற்கான தேவையினை விழிப்புணர்வு எழுப்புகின்ற மற்றும் பொதுமக்களுக்கு கிடைத்த பொருள் அடிப்படையில் இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பின்னால் உள்ள பொருள் மற்றும் செயல்முறை பற்றி பங்கேற்பாளர்களுக்கு பயணுள்ளதாக இந்த கருத்தரங்கு அமைகின்றது.

இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகளைச் சுற்றியுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக பொதுமக்களுக்கு மிகவும் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தைத் தோற்றுவிப்பதற்கான காரணங்கள் இந்த கருத்தரங்கில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

நாட்டின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றத்தில் சம்பந்தப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்காகவும், அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடு தொடர்பான பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடுவதற்கும் பொது மக்களுடைய தேவைகள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்குவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு உதவுகிறது.

இந்த முயற்சிகள் பொது நம்பிக்கையை கட்டியெழுப்பவும், தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பட்டியலில் கூடுதலான உள்ளுணர்வுகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்த படுகின்றது.

இந்த கருத்தரங்கில் அரச சிரேஷ்ட உத்தியேபகத்தர்கள் 80 பேரும்இ 100 இராணுவ பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் 25 பேரும் கலந்து கொண்டனர்.

Best Nike Sneakers | Nike Running