Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2017 09:57:15 Hours

இராணுவத்தினர் கடற்கரை பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

தேசிய கடல்சார் வள பாதுகாப்பு கழகத்தினரால் செப்டெம்பர் 15 -23 வரை சுத்திகரிப்பு நடவடிக்கையில் மத்திய மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மகாவலி அபிவிருத்தி இணைந்து தங்காலை மற்றும் அம்பாறை கடற்கரை பிரதேசங்களில சுத்திகரிப்பு திட்டத்தை மேற்கொண்டது.

இராணுவ தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு ஆண்டும் தேசிய மரநடுகை மற்றும் வள பாதுகாப்பு திட்டத்தை இராணுவத்தினர் பின்பற்றுகின்றனர்.

இந்த சுத்திகரிப்பு பணியானது கடந்த புதன் கிழமை (20) 122ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியவர்களின் தலமையில் 100 க்கும் மேற்பட்ட படைவீரர்களின் பங்களிபோடு.இடம்பெற்றது.

இத் திட்டத்திட்கு மேஜர் ஜெனரல் எல் எம் கே முதலிகே அவர்களின் ஆலேசனைக்கு அமைவாக அருகம்பே, கல்முனை மற்றும் திருக்கோயில் போன்ற பிரதேசங்களில் இந்த சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் படைத் தளபதிகள் ,24 படைப்பிரிவினர் மற்றும் 241 ,242 படையிரும் கலந்து கொண்டனர்.

மேலும் அரசாங்க அலுவலர்கள் கடலோர பிரதேச செயலக அலுவலர்கள் பொலிஸ், சிவில் அமைப்புகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் 1000கும் மேற்பட்ட பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி 12 பாதுகாப்பு படையினரும் ஒத்துளைப்பு வழங்கினர். திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தென் மாகண கடலோர பாதுகாப்பு அதிகார சபையின் முகாமைத்துவப் பணி உத்தியோகத்தர் இது சம்மந்தமாக உறையாற்றினார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்பார்வையில் 300 முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், அரச உத்தியோகத்தர்கள், பள்ளி மாணவர்களது பங்களிப்புடன் செப்டம்பர் 20 , 21 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பிரதேசங்களில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்களாக விளங்ம் முல்லைத்தீவு மற்றும் அலம்பேபில் பிரதேசங்களில் 3 கி.மீ தூரத்திலுள்ள கடற்கரை பிரதேசங்கள் 591, 593 ஆவது படைத் தலைமையக படை வீரர்களது பங்களிப்புடன் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு பணிகளில் அரச உத்தியோகத்தர்கள் , முப்படையினர்கள் ,பொலிஸார் , பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Sneakers