Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2017 18:35:23 Hours

இராணுவ தளபதி கூட்டுப்படைப் பயற்சி நடவடிக்கை தலைமையகமான மின்னேரியவிற்கு விஜயம்

2017ஆம் ஆண்டிற்கான மின்னேரிய கூட்டுப்படை பயிற்சி நடவடிக்கை தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கடந்த விஜயத்தை மேற்கொண்டார்.

மேலும் இப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களுக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு இராணுவ காலாட் படை பயிற்ச்சி நிலையத்தின் தளபதியான பிரிகேடியர் டி எஸ் பண்சஜயா அவர்கள் வரவேற்றார்.

அதேபோன்று முப்படைகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான இக் கூட்டுப் பயிற்சியில் இப் பயிற்ச்சிகள் தொடர்பான தௌிவான விளக்கத்தை மற்றும் கால அட்டவனை தொடர்பான விளக்கத்தை வியாழக் கிழமை (14) கூட்டுப் பயிற்ச்சிப் பணியகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் விபரித்தார்.

மேலும் இப் பயிற்ச்சிகளில் பலவாறான வெவ்வேறு விதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி விவரிக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர , இராணுவப் பயிற்சித் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்தின , கொமாண்டோ படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா , இராணுவ பயிற்சிப் பணியகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய ,விசேட படைத் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் எச் பி ரணசிங்க மற்றும் மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Nike sneakers