Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2017 16:58:06 Hours

இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு குருணாகல் மாளிகாபிடிய மைதானத்தில் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (8)ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் மலிவு விற்பனைகள் மற்றும் சுவையான உணவு வகைகள் இந்த நிகழ்வின் ஊடாக பொது மக்களுக்காக முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளினுாடாக கிடைக்கப் பெறும் நிதி அங்கவீனமுற்ற படை வீரர்களது நலன்புரி நிமித்தம் ஒதுக்கப்படும்.

இந் நிகழ்விற்கு வடமேல் மாகாண ஆளுனர் திருமதி அமரா பியசிலி ரத்நாயக அவர்கள் இறுதி நாள் (9)ஆம் திகதி நிகழ்விற்கு படைத் தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்தார். இந்த ஹாடியன்மெகா நிகழ்வில இலங்கையில் புகழ்பெற்ற ப்ளேஷ்பெக் மற்றும் சீதுவ சகுரா இசைக்குழுவினர் இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,படை வீரர்கள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு இந்த படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு மங்கள விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

Running Sneakers | New Releases Nike