Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2017 09:28:19 Hours

இராணுவத்தினரால் மருதங்கேணி பிரதேசத்தில் வறிய குடும்பத்தவருக்கு புதிய வீடு

பௌத்த மத சுமனரத்ன நாயக்க தேரரர் மற்றும் திரு. தன் அவர்களது அன்பளிப்புடன் மருதங்கேணி கிராம சேவக பிரிவிற்குரிய வறிய குடும்பத்தைச் சேரந்த நபருக்கு புதிய வீடொன்று 552ஆவது படைத் தலைமையகத்தினால் நிர்மானிக்கப்பட்டு உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிர்மானிக்கப்பட்ட புதிய வீட்டு உரிமையாளரான ஆர்.எம் . ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.தன் மற்றும் சுமனரத்ன நாயக்க தேரரர் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டது.

இந்த வீட்டை 55ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் அருன முகந்திரம் அவர்கள் வீட்டு உரிமையாளருக்கு வழங்கினார்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் முறையான தங்குமிட வசதியில்லாமல் இருப்பதை அப் பிரதேச கிராம சேவக அதிகாரி அவதானித்து இது தொடர்பாக பாதுகாப்பு தலைமையகத்தின் அவதானத்திற்கு கொண்டு வந்ததன் பின்பு சுமணரத்ன நாயக்க தேரரிற்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்து பின்பு பௌத்த தேரரினால் இந்த ரமேஷிற்கு இந்த ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த வீடு வழங்கும் நிகழ்வு (1)ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பௌத்த தேரர் மற்றும் அன்பளிப்பாளரான திரு. தன், 55ஆவது படைப் பிரிவு மற்றும் 552ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகளும், கிராம சேவக உத்தியோகத்தரும் அப் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர்.

Asics shoes | Buy online Sneaker for Men