28th August 2017 13:08:27 Hours
2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இன்றைய தினம் (28) காலை வேளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் அதிக பாதுகாப்புடனும் இராணுவ மரியாதைகளுடனும் கண்கவர் விதங்களில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்ட இம் மாநாட்டு மண்டபத்திற்கு பிரதம அதிதியாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்தார்.
மேலும் இந் நிகழ்வில் முதல் கட்ட அங்கமாக மங்கள விளக்கேற்றல் இடம் பெற்றதுடன் விளக்கை ஏற்றிவைக்க முக்கிய பிரமுகர்களான மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்கள், பீல்ட் மார்சல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொண்சேகா , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன , ஜனாதிபதிச் செயலாளர் ஒஸ்டின் பெணான்டோ , பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்தின, அட்மிரால் வில்லியம் ஜெ பாலொன் (ஓய்வு) , பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின , இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா , விமானப்படைத் தளபதி ஏயார் மார்சல் கபில ஜயம்பதி போன்றோர் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் வரவேற்புரை இராணுவத் தளபதியவர்களால் இடம் பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த பிரதம அதிதிகள் மற்றும் பிரமுகர்களை மனப்பூர்வமாக வரவேற்றதோடு பரந்த எல்லைகள் தொடர்பான விளிப்புனர்வு அறிவினை பற்றிய விடயத்தை பாதுகாப்பு படையினர்களுக்கு விரிவுபடுத்தினார்.
வெளிநாட்டு விவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் , பொலிஸ மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் இராணுவ தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இப் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு பங்கேற்ற பிரமுகர்களின் விபரங்கள் கீழ்வருமாறு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் படைத் துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்
பீல்ட் மார்ஷல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா
அனைத்து ஆளுநர்களும்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவத்திற்குரிய ருவன் விஜேவர்தன
ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெணான்டோ
பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன
ஐக்கிய அமெரிக்க துாதரகத்தின் உயர் ஸ்தானிகர் அட்மிரால் வில்லியம் ஜே பாலோன்
ஸ்செம்பியன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் போல் மிகோவா
பாகிஸ்தான் இராணுவத்தின் 11ஆவது படையணியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நசீர் அக்மட் பூட்
முப்படைகளின் பாதுகாப்பு பிரதானி அட்மிரால் ரவி விஜேகுணரத்ன,
பசுபிக்கின் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொபட் ஜே நொபேல்
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,
பேச்சாளர்கள் , சபை நபர்கள் மற்றும் பிரமுகர்கள்,
முப்படைகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள்,
ஊடகவியலாளர்கள், போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள்,
இந் நிகழ்விற்கு ஓய்வின்மையின்றி தமது உயர் கடமைகளை வகிக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு படைகளின் தளபதிகள் மற்றும் மேலும் பல உயர் பிரமுகர்களை நான் அன்போடு வரவேற்கின்றேன்.
எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவரையும் நாம் வரவேற்பதோடு இக் கருத்தரங்கில் நாம் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பின் கீழ் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்காக அமைகின்றது.
அந்த வகையில் மூன்று தசாப்த காலமாக எமது நாட்டில் நிலவிய கொடிய பயங்கர வாதத்தை 2009ஆம் ஆண்டு நிறைவிற்கு கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை அனைத்து நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடனும் ஓர் சிறந்த உறவுமுறையை வலுப்படுத்தும் எண்ணக்கருவுடன் 2011ஆம் ஆண்டு இப் பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் இக் கருத்தரங்கானது தற்போதய காலகட்டங்களில் அனைத்து நாடுகளிலும் உலகலாவிய ரீதியில் நிலவுகின்ற பயங்கரவாக செயற்பாடுகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் அமையப்பெறுகின்றது.
மேலும் இலங்கை இராணுவமானது கொடிய பயங்கரவாத்தை முற்றாக ஒழித்து தமது தாய் நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுத் தந்தமை பெறுமைக்குறிய விடயமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் உலகலாவிய ரீதியில் கொடிய பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினால் ஆசியாவில் சிறந்த இராணுவமாக விளங்குகின்றது.
அதனைத் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்த நிபுணர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கும் முகமாக இந் நிகழ்வில் கலந்து கொண்டமை எமக்கு பெருமைக்குறிய விடயமாக காணப்படுகின்றது.
இக் கருத்தரங்கிற்கு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் வருகை தந்த மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களையும் , பாதுகாப்பு செயலாளர் போன்றோரிற்கு நன்றி தெரிவிப்பதோடு இக் கருத்தரங்கில்கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பயனுள்ள ஓர் விடயமாக அமையும் என நான் நம்புகின்றேன்.
மேலும் மீண்டும் ஒருமுறை இக் கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள அனைத்து பிரமுகர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
jordan release date | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5