22nd August 2017 09:40:57 Hours
இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகம் இட வசதிகள் போதாமையின் நிமித்தம் புதிதாக மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள நாவுல பிரதேசத்தில் போதிய வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்ட முகாமுக்கு சனிக்கிழமை (19)ஆம் திகதி இராணுவ தளபதி விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை விஷேட படையணியின் கட்டளை தலைமை அதிகாரி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்கவினால் வரவேற்கப்பட்டு இராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் விஷேட படையணியின் சிறப்புத் தன்மையை காக்கும் நோக்குடன் செயற்பட வேண்டும் என்று படை வீரர்களுக்கு உறையை நிகழ்த்தினார். பின்பு விஷேட படையணியின் படைத் தளபதிக்காக அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்திற்கு சென்று தனது வருகையிட்டு பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு முகாமினுள் மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டார்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களை நினைவு படுத்தி இந்த முகாமினுள் அமைக்கப்பட்டிருந்த நினைவு துாபிகளுக்கு இராணுவ தளபதி மலரஞ்சலியை செலுத்தினார்.
இந்த தலைமையகத்தின் முதலாவது விஷேட படையணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட அதிகாரி விடுதியையும் இராணுவ தளபதி திறந்து வைத்தார். அச்சமயத்தில் முதலாவது விஷேட படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரி,சிரேஷ்ட அதிகாரிகள்,இராணுவ படைவீரர்கள் இராணுவ தளபதியை வரவேற்றனர். பின்பு இராணுவ தளபதியினால் இந்த புதிய இராணுவ முகாம் அபிவிருத்திக்காக மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படை வீரர்கள் இராணுவ தளபதியுடன் குழு புகைப்படத்தில் இணைந்தனர். இந் நிகழ்வின் இறுதி அம்சமாக இராணுவத்தினரின் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது.
Sports Shoes | Women's Nike Superrep