Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2017 10:34:37 Hours

இறுதிச் சுற்றில் வெற்றியீட்டிய சிவில் விளையாட்டுக் கழகம்

சிவில் மற்றும் படையினருக்கிடையிலான நல்லினக்கத்தை பேணும் நோக்கில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் உதைப்பாட்டப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமை (11) இடம் பெற்றது.

அந்த வகையில் பள்ளிக்குடா ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் 661ஆவது இராணுவப் படைப் பிரிவின் 15ஆவது (தெண்டர்) விஜயபாகு காலாட் படையணியுடன் மோதி இறுதிச் சுற்றில் வெற்றியீட்டியது.

அந்த வகையில் 66ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெடிவலான அவர்களின் ஆலோசனைக்கமைய படையினர் பயிற்றுவிக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப் போட்டியைப் பார்வையிட அதிகளவிலான பள்ளிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் 2புள்ளிகளால் ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் விஜயபாகு காலாட் படையணியுடன் மோதி இறுதிச் சுற்றில் வெற்றியீட்டினர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பராமரிப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் பிம்மல் விதானகே அவர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படையினரால் பொன்நேரியன் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் கிளிநொச்சி 651 , 661 மற்றும் 663 படைப் பிரிவுகளைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

best Running shoes brand | Air Jordan Sneakers