Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2017 12:07:59 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் மூக்குக் கண்ணாடிகள் வினியோகம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் மீண்டுமோர் சமூக சேவைப் பணிகள் கடந்த சனிக் கிழமை (12) கிளிநொச்சி நெலும் பியஸ மண்டபத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் கொழும்பு , விசன் கெயார் ஒப்டிகள்ஸ் (Vision Care Optical)இன் அனுசரனையோடு 40ற்கும் மேற்பட்ட கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

கடந்த யூலை மாதம் இவ்வாறான சமூக சேவைப் பணிகளை கிளிநொச்சியின் 65ஆவது இராணுவப் படைத் தலைமையத்தின் தளபதி மேஜர் ஜெனர் சரத் வீரவர்தன அவர்களின் தலைமையில் முன்னெடுத்ததுடன் பொதுமக்களுக்கான அளப்பரிய சேவையை இப் படைத் தலைமையகம் மற்றும் கொழும்பு ,விசன் கெயார் ஒப்டிகள்ஸ்(Vision Care Optical)நிறுவனத்தினர் வழங்குவது எவ்விதத்திலும் மிகையாகாது.

அந்த வகையில் இப் பிரதேச மக்கள் 200 பேரிற்கு கண் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டு 40 கண் நோயாளிகள் கண்டறியப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன , 57பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ,கிளிநொச்சி பிரதேசத்தின் இராணுவ நிறுவாக அதிகாரி ,திரு கிரிசாந்த சொய்சா மற்றும் கொழும்பு ,விசன் கெயார் ஒப்டிகள்ஸ் (Vision Care Optical)நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

latest Running | Nike for Men