Header

Sri Lanka Army

Defender of the Nation

14th August 2017 17:00:16 Hours

இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் தலைமையகம் திறந்து வைப்பு

பதுகாப்பு படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் அனுசரனையோடு அமைக்கப்பட்ட அதி நவீன மயப்படுத்தப்பட்ட புதிய கேட்போர் கூடமானது இராணுவத் தளபதியான லேப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.

குருணாகல வெகரவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இப் படையணித் தலைமையத்திற்கு வருகை தந்த இராணுத் தளபதியவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றதுடன் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கமைவாக இக் கட்டிடத் தொகுதியாது இராணுவத் தளபதியவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 30 கணணிகள் உள்ளடங்களாக அமைக்கப்பட்ட கணணிக் கூடம் மற்றும் நுலகம் போன்றன இங்கு திறந்து வைக்கப்பட்டதோடு இத் தலைமையகத்தின் முன்னய தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வூ) அவர்களினால் பெறுமதிமிக்க நுல்களும் இந் நுலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன் சந்திரிக்கா சேனாநாயக்க மற்றும் விக்கிரம ரத்தின அம்மனியவர்கள் அத்துடன் சேவா வனித சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இவர்களது தலைமையில் இத் தலைமையகத்தில் சேவா வனிதா கிளையூம் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி மற்றும் சிலாபம் பேன்ற பிரதேசங்களின் வைத்தியசாலைகளுக்கு 17 நோயாளர் படுக்கைகளும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு 34 சக்கர நாற்காலிகளம் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள் இராணுவ தொண்டர் படையணிகளுள் மிக பாரிய படையணியாகவும் விளையாட்டு , நடவடிக்ககைகளின் போது மிக பாராட்டத் தக்க சேவையை இப் படையணி வழங்கியுள்ளது எனக் கூறிப்பிட்ட அவர் இத் தலைமையகத்தில் மர நடுகையினையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்து இத் தலைமையகத்தில் அதிகாரிகளுக்கென நிர்மானிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியையும் இராணுவத் தளபதியவர்கள் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வின் இறுதியில் இத் தலைமையகத்தின் தளபதியவர்களால் இராணுவத் தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.

Authentic Nike Sneakers | Nike, adidas, Converse & More