Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2017 16:32:34 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

2017ஆம் ஆண்டிற்கான இராணுவ படையணிகளுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி 9 ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை படைக்கலச் சிறப்பணி, இலங்கை பீரங்கிப் படையணிஇலங்கை பொறியியலாளர் படையணி,இலங்கை சமிக்ஞை படையணி,இலங்கை இலேசாயுத காலாட் படையணி,இலங்கை சிங்க அணி,கெமுனு ஹேவா படையணி,கஜபா படையணி,விஜயபாகு காலாட் படையணி,கமாண்டோ படையணி,பொறியியலாளர் சேவை படையணி,இலங்கை இராணுவ பொது சேவை படையணி,இலங்கை போர் கருவிச் சிறப்பணி,இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி,இலங்கை இராணுவ சேவை படையணி,இராணுவ பொலிஸ் படையணி,இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் இராணுவ புலனாய்வு படையணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் இறுதி சுற்றுக்கு கெமுனு ஹேவா படையணி மற்றும் இராணுவ சேவை படையணி இணைந்து கொண்டு ஆட்டத்தை மேற்கொண்ட இடையில் கெமுனு ஹேவா படையணி வெற்றியை பெற்று கொண்டது.

இப் போட்டி நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் அதுல கொடிபிலி இராணுவ உதைப் பந்தாட்ட விளையாட்டின் பணிப்பாளர் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் கெமுனு ஹேவா படையணி இரண்டு ஹோல்கலால் இலங்கை சேவை படையணியை வெற்றியீட்டியது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இங்கு இராணுவ தளபதியினால் முன்னாள் இராணுவ கால்பந்து குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தம்மிக காரியவஷம் அவர்களுக்கு பெறுமதிமிக்க நினைவுச் சின்னம் பரிசளிக்கப்பட்டது.

buy shoes | Autres