Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2017 14:18:00 Hours

5 ஆவது தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு ஆரம்பம்

இராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணியகம் மற்றும் இலங்கையின் அமெரிக்க துாதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் வருட , 5ஆவது தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கானது கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த திங்கட் கிழமை (8) காலை வேளை இடம் பெற்றது.

கிட்டத்தட்ட இவ் 10 நாட்கள் உள்ளடங்களாக எல்லைக் கட்டுப்பாடு தொடர்பாக இடம் பெற்ற இக் கருத்தரங்கில் பங்கலாதேஷ் , கொம்போடியா , இந்தியா , இந்தோனேசியா , மொங்கோலியா , நேபாளம் , பிலிப்பைன்ஸ் , மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய 30ற்கும் மேற்பட்ட இராணுவ சிவில் தொடர்பாடல் இணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளின் அமெரிக்க துாதரகத்தின் துhதுவர் அதுல் கெஷாப் கலந்து கொண்டதுடன் இக் கருத்தரங்கின் முதல் அங்கமாக இராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் மங்கள விஜேசுந்த அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் 40 இராணுவ அதிகாரிகள் , 3 கடற்படை அதிகாரிகள் , 3 விமானப் படை அதிகாரிகள் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் சிவில் தொடர்பாடிலின் போதான ஊடகம் போன்ற பல்வாறான தலைப்புகளின் கீழ் இடம் பெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர்.

மேலும் இக் கருத்தரங்கானது எதிர்வரும் வெள்ளிக் கிழமை (18) நிறைவு பெறவுள்ளது.

Authentic Sneakers | balerínky