Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2017 12:45:13 Hours

காலஞ்சென்ற படைவீரர் லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்களின் நினைவு தினம்

கைட்ஸ் அராலி முகாமில் 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ குழுவினரின் கண்ணிவெடி தாக்குதலிற்கு பலியாகி மரணித்த லெப்டினன்ட் ஜெனரல் தென்சில் கொப்பேகடுவ அவர்களின் 25வருட நினைவு தின நிகழ்வானது கடந்த திங்கள் (7) மற்றும் செய்வாய்க்(8) கிழமைகளில் இடம் பெற்றது.

அந்த வகையில் அனுராதபுர தான்திரிமலே ரஜமகா விகாரையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மரணித்த இவ் இராணுவ அதிகாரியவர்களின் நினைவுத் துாபிக்கு அவரது துனைவியாரான திருமதி லலி கொப்பே கடுவ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் கடந்த திங்கட் கிழமை (7) மேற்படி மரணித்த இராணுவ அதிகாரியின் நினைவாக அன்னதான நிகழ்வுகள் மற்றும் பௌத்த மத வழிபாடுகள் போன்றன அனுராதபுர தான்திரிமலே ரஜமகா விகாரையில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் நாளான கடந்த செவ்வாய்க் கிழமை (7) லங்கதராம விகாரையில் 15 பௌத்த தேரர்களின் பங்களிப்போடு பௌத்த மத ஆத்ம சாந்தி கிரிகைகள் இடம் பெற்றதோடு மேலும் கலத்தாவையில் உள்ள இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணித் தலைமையகத்தில் மேலும் பல நினைவாண்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே , வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் மரணித்த இராணுவ அதிகாரியின் துனையியாரின் உறவினர்கள் அத்தோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி உயிர்நீத்த இராணுவ அதிகாரியானவர் 25ஆம் திகதி மே மாதம் 1960ஆம் வருடம் இலங்கை இராணுவத்தில் இணைந்து பயிற்ச்சியீட்டிய அவர் 03ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 1962ஆம் வருடம் இரண்டாம் லெப்டினனாக இவர் சேவையாற்றினார்.

மேலும் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ , மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின , ரியர் அத்மிரால் மொஹோன் ஜயமக , கேணல் எச் ஆர் ஸ்டீபன் , கேணல் ஜி எச் ஆரியரத்தின , கேணல் வை என் பலிபான , கொமாண்டர் அசங்க லங்காதிலக , லெப்டினன்ட் கேணல் நலிந்த டி சில்வா, லெப்டினன்ட் கொமாண்டர் சி பீ விஜயபுர மற்றும் இராணுவ படைவீரர் டபிள்யூ டீ விக்கிரமசிங்க போன்ரோர் 1992ஆம் வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாணம் கைடிஸ் பிரதேசத்தின் அராலி குடுவையில் எல் ரீ ரீ ஈ யினரின் நிலக் கண்ணிவெடிக்ககு அகப்பட்டு மரணித்தனர்.

latest jordans | Patike