06th August 2017 23:46:22 Hours
ஜப்பான் டோக்கியோ நகரில் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இடம் பெற்ற ஜப்பான் வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சியில் (JDIE) கலந்து கொண்ட இலங்கை இராணுவ படை வீரரான கோப்பிரல் டீ எம் சி திசாநாயக்க அவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும் இலங்கை இராணுவத்தின் 2ஆவது புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர் அனர்த்தத்தின் போது தற்காப்பு பாதுகாப்பு வலயமைப்பு என்ற செயற்பாட்டின் ஆக்கமைப்பிற்கே இவரிற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டதுடன் இவரது முதல் படைப்பானது யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தினால் இடம் பெற்ற கண்காட்சிப் போட்டியில் பங்கேற்றதுடன் இவரது திறமையினைக் கருத்திற் கொண்டு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து தம்மால் இயன்ற உதவிகளையும் வழங்குவதாக கூறியுள்ளார்.
மேலும் இப் படைவீரரால் முன்வைக்கப்பட்ட இவ் ஆக்கப்பாட்டிற்கு இலங்கையின் புதிய ஆக்கப்பாட்டு ஆணையகத்தினால் (SLIC) இவ் ஆணையகத்தின் தலைவரான கலாநிதி மகேஷ் எதிரிசிங்க அவர்களின்; வழிகாட்டலின் கீழ் டோக்கியோ நகரில் கண்காட்சிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சில தினங்களுக்கு முன்பதாக இலங்கையின் புதிய ஆக்கப்பாட்டு ஆணையகத்திற்கு இவ் ஆணையக தலைவரினால் வரவழைக்கப்பட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டதுதோடு இவ் வேளை இராணுவத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு ஆலோசனை மற்றும் அபிவிருத்திப் பிரிவின் உப தலைமை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ரஞ்சித் தர்மசிரி போன்றௌரும் கலந்து கொண்டனர். (மேலதிக விபரம் பின்னர் வழங்கப்படும்)
jordan release date | Nike - Shoes & Sportswear Clothing