01st August 2017 11:58:31 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக முதலாவது கடமை விஜயத்தை (29) ஆம் திகதி சனிக் கிழமை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மேற்கொண்டார்.
யாழ்ப்பாண பாதுகாப்புக்கு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வரவேற்று இராணுவ தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையை வழங்கினார்.
இங்கு வருகை தந்த இராணுவ தளபதி அங்கிருந்த 2000 படையினர்களுக்கு உறையை நிகழ்த்தினார். பின்பு இராணுவ தளபதியினால் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் பிரியாவிடையில் கலந்து கொண்டு இராணுவத்தினருடன் மகிழ்ந்து உறையாடினார். பின்பு முகாமினுள் மரநடுகை நிகழ்வு இராணுவ தளபதியினால் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவத் தளபதிக்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியினால் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் இரண்டாவது கட்டமாக யாழ்ப்பாண குடாநாட்டில் உயர்தர பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அத்தருணத்தில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்களாலும் இந்த பரிசுகள் இராணுவ தளபதியுடன் இணைந்து வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இந்த நிகழ்வு (29)ஆம் திகதி மாலை யாழ்ப்பாண வீரசிங்க மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படைப் பரிவின் படைத் தளபதிகள் , கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் , படை வீரர்கள், அரச உயரதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Nike air jordan Sneakers | nike fashion