29th July 2017 10:00:13 Hours
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அண்மையில் ‘யாழ்ப்பாண புத்தாக்கம் – 2017’தலைப்பில் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் இராணுவத்தினரால்’ மேற்கொண்ட புதிய நிர்மானிப்புகள் மக்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ‘ இயற்கை அனர்த்தங்களின் போது தானாக ஒலிக்கும் கருவிகள்’ 2ஆவது இராணுவ புலனாய்வு படையணியின் கோப்ரல் திசாநாயகவினால் நிர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த கருவியை இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவிற்கு முன் வைத்ததன் பின்பு அவர்களினால் இந்த கருவியை ஜப்பானில் அமைந்துள்ள புதிய புத்தாக்க நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.
கோப்ரல் டீ.எம்.சி திசாநாயக முன்வைத்துள்ள கண்டுபிடிப்பை ‘இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் சர்வதேச மட்டத்திற்கு புதிய நிர்மானிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டள்ளது. அதன் பிரகாரம் உலக புத்தாக்க அறிவுசார் சொத்து சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு ஜப்பான் டோக்கியோ பிக்சயிட்டில் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை ஜப்பான் திட்ட நிர்மாணிப்பு மற்றும் புத்தாக்க கண்காட்சிக்கு செல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் அனைத்து படைப் பிரிவின் படைத் தளபதிகளது ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சிகள் இராணுவத்தினரது திறமையை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சியாகும்.
இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சமிந்த எதிரிசிங்கவினால் கோப்ரல் திசாநாயக அவர்களது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவரது அழைப்பிதலை வழங்கினார். அந்த சந்தர்ப்பத்தில் இராணுவ ஆராய்ச்சி,பகுப்பாய்வு,திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி கிளையின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்ஜித் தர்மசிறியும் இணைந்திருந்தார்.
spy offers | Ανδρικά Nike