Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2017 11:38:19 Hours

‘இராணுவ அங்கத்தவர்கள் 25 பேருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்’ அறிவிப்பு மற்றும் தொடர்பாடல் கற்கைநெறி பயிற்சிகள்

இராணுவ ஊடக பணியகத்தினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய 32 நாட்கள் நடைபெற்ற இந்த கற்கைநெறிகள் (24)ஆம் திகதி திங்கட் கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நிறைவு பெற்றது.

இந்த பயிற்சிகளுக்கு இராணுவத்தின் அனைத்து படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டனர். பயிற்சி நெறிகளில் ஆக்கப்பூர்வமான தொலைத் தொடர்பாடல், மயிக்ரோபோன் பாவனை, நிகழ்ச்சி அறிக்கைகள், ஒலிபரப்பு மொழி மற்றும் அறிவிப்பு, வர்த்தக விளம்பரங்கள் முன்வைப்பு , தகவல்கள் சேகரித்தல், எழுத்து மற்றும் வடிவமைப்பு, செய்தி முன் வைப்பு, நேரடி ஒலிபரப்பு, உச்சரிப்பு பிழையின்றி நடைமுறை படுத்தல், குரல் பயிற்சி ஒலிபரப்பு நிகழ்ச்சி தயாரிப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாரச்சி, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிபிரிய, இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பயிற்சி மற்றும் வெளிநாட்டு தொடர்பாடல் பணிப்பாளர் திலிண சமரசூரிய, மேலதிக பணிப்பாளர் துஷாரி வெலஹெதர, இராணுவ ஊடக பணியகத்தின் (கேர்ணல் ஊடகம்) பிரிகேடியர் லமாஹேவா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

latest Running | Jordan Shoes Sale UK