Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2017 15:35:38 Hours

பூனகிரி பொதுமக்கள் 1000 பேருக்கு நடமாடும் வைத்திய சிகிச்சைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66ஆவது படைத் தலைமையகம் இணைந்து பூனகிரி பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த1000 பேருக்கு சனிக்கிழமை (08)ஆம் திகதி பூனகிரி மகாவித்தியாலயத்தில் நடமாடும் வைத்திய சிகிச்சைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைத்திய சிகிச்சைகள் வைத்தியர் லக்ஷ்மன் வீரசேன உட்பட 25 வைத்தியர்களால் 3 இலட்சம் பெறுமதி வாய்ந்த மருந்து உபகரணங்களுடன் இந்த சிகிச்சை இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது ஆலோசனைக்கு அமைய 66ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்படிவலான அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த சிகிச்சைகள் இடம்பெற்றது.

பூனகிரி பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், மக்கள் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் குடும்ப சுகாதார தாதிமார்கள், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி,66வது படைத் தளபதி ,சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Running sports | Nike for Men